கொழும்பு, மருதானையில் விபசார விடுதி முற்றுகை

கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சங்கராஜ மாவத்தையில் இயங்கி வந்த விபசார விடுதி நேற்று (30) மாலை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன், பொலிஸார் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த விடுதியை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரும் பெண்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பசறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]