கொழும்பு நகரில் புதிய திட்டம்

கொழும்பு நகரத்தில் இயற்கை கழிவு மற்றும் மழை நீர் வெளியேறுவதற்கான இரண்டு புதிய குழாய் கட்டமைப்பு திட்டம் அமைப்பதற்கு நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியன இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியிருப்பதாக கொழும்பு மாநகரசபை தலைமைப் பொறியியலாளர் லலித் விக்ரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பு நகரில் மாடி வீடமைப்பு மற்றும் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடங்களுக்குப் பொருத்தமான வகையில் இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக லலித் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

இதற்காக புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்றும் கொழும்பு நகரத்தில் சுமார் ஏழு இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதற்கு மேலதிகமாக நாளாந்தம் மேலும் எட்டு இலட்சம் பேர் கொழும்பு வருகை தருகின்றனர். இவர்களின் வசதி கருதி நீர், மின்சாரம், வீதி உள்ளிட்ட வசதிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.