கொழும்பு துறைமுகத்துக்கு இந்திய போர்க்கப்பல்களே அதிகளவில் வருகை

கொழும்பு

சீன கடற்படைக் கப்பல்களின் வரவு இலங்கையில் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நிராகரித்துள்ளார்.

இந்திய கடற்படையின் ஏற்பாட்டில் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தோ-பசுபிக் பிராந்திய கலந்துரையாடலில் உரையாற்றிய போதே கூட்டுப்படைகளின் தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களின் வருகை கொழும்புத் துறைமுகத்துக்கு அதிகளவில் இடம்பெறவில்லை என்று தெரிவித்த அவர், கடந்த வருடத்தில் 14 நாடுகளைச் சேர்ந்த 65 போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்தாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கப்பல்களில் அதிகமானவை இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமானவை என்றும், அவ்வாறு இந்தியாவின் 22 போர்க்கப்பல்கள் கடந்த வருடம் கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]