கொழும்பு தாமரைக் கோபுரம் இந்த மாதம் 25ஆம் திகதி திறக்கப்படவுள்ளது

ஆசியாவின் உயர்ந்த கட்டடம் என அழைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் இம்மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியில் குறித்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கோபுரத்தின் உயரம் 356 மீற்றர் அல்லது 1153 அடிகள் ஆகும்.

இலங்கையின் அடையாளமாக அமையப்போகும் தாமரை கோபுரத்தின் கட்டுமானப் பணிகளுக்குச் செலவிட்ட பணத்தை 14 வருடங்களில் ஈடுசெய்ய முடியும் என இத்திட்டத்தைத் தயாரித்த பேராசிரியர் சமிந்த மாணவாடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 14 வருடங்களின் பின்னர் ஈட்டப்படும் வருமானம் நாட்டுக்கு இலாபமாக அமையும். இந்த அடையாளச் சின்னமானது பகல் வேளைகளில் மாத்திரமன்றி இரவுவேளைகளிலும் தெளிவாகத் தெரியும் வகையில் அணைந்து அணைந்து எரியக்கூடிய மின்விளக்கு அலங்காரங்களையும் கொண்டதாக அமையவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]