கொழும்பு – டெல்லிக்கு இடையே கூட்டு பொருளாதார உடன்படிக்கை : பிரதமரின் இந்திய விஜயத்தில் அடித்தளம்

கொழும்பு – டெல்லிக்கு இடையே கூட்டு பொருளாதார உடன்படிக்கை ஒன்று எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் கைச்சாத்திட புதுடெல்லி இணக்கம் தொடர்வித்துள்ளதாக அரச தரப்பு செய்திகள் குறிப்பிடுகின்றனர்.  பிரதமரின் இந்திய விஜயத்தில் இந்த உடன்படுக்கை கைச்சாத்திடப்பட  உள்ளதாகவும் அறியமுடிகிறது.

கொழும்பு - டெல்லிக்கு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இம்மாத இறுதி வாரத்தில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன்போதே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கைக்கு எதிராக நாட்டின் பல்வேறு தரப்பினரும் எதிர்பை வெளியிட்டதால் உடன்படிக்கை கைச்சாத்திடுவதை இலங்கை அரசு பிற்போட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது கூட்டு பொருளாதார உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசு இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ளது.

தெற்கு மற்றும் கிழக்கில் இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்க அடையாளம் காணப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

அடுத்த இரண்டு தொடக்கம் நான்கு ஆண்டுகளில் இந்தியாவிடம் இருந்து 2 பில்லியன் டொலர் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் முகமாக அரசு காய்கலை நகர்த்தியுள்ளது. பிரதமரின் இந்திய விஜயத்தில் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படுவதுடன், எட்கா உடன்படிக்கை தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்றையும் எடுக்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]