கொழும்பு ஜிந்துப்பிட்டியில்  கண்ணாடி வழங்கும் நிகழ்வு

கொழும்பு – அகில இலங்கை சபரிமலை குரு சுவாமிகள் ஒன்றியம், அதன் முதலாவது வருட பூர்த்தியை முன்னிட்டு, ஆதி ஐயப்ப தீர்த்த யாத்திரை மன்றம் மற்றும் மகா மித்ரகுரு ராமதாஸ் குருசுவாமி அனுசரணையுடன் நடத்தும் மாபெரும் கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வுகள், கொழும்பு – 13, ஜிந்துப்பிட்டி, நீதி ராஜா வரவேற்பு மண்டபத்தில், (24) ஞாயிறு காலை 8 மணி முதல் இலவசமாக  இடம்பெறவுள்ளன.
அகில இலங்கை குருசுவாமிகள் ஒன்றியத் தலைவர் தேசபந்த் ஆறுமுகம் ரவிந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கை மனித உரிமைகள் இயக்க ஸ்தாபகர் ஜயந்த பீரிஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் துஷார ஹேமந்த (மஞ்சு), அன்னை உள்ளம் ஸ்தாபகர் சி.அருளானந்தம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]