கொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. அதில் கொழும்பு சின்னமன் ஹொட்டலும் ஒன்று. இந்த ஹொட்டலில் தாக்குதல் நடத்திய குண்டுதாரி இஷாப்(37) என்பவர் என கூறப்படுகிறது. இவரின் குடும்ப பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

இவர் இலங்கை கோடீஸ்வரரின் மகனான இவர் ஒரு தொழிலதிபர்.  இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள இவரின் வீட்டின் மதிப்பு  மட்டும் £1.5 மில்லியன் பவுண்ட்.

உடற்பயிற்சி மையம், விலை உயர்ந்த் கார்கள் உட்பட பல்வேறு வசதிகள் இவரது சொகுசு  வீட்டில் இருந்துள்ளன. மிகவும் அமைதியாக நபர் அருகில் வசிப்பவர்களால் அறியப்பட்ட இவர் , தாக்குதலுக்கு செல்வதற்கு முன்னர் வர்த்தகம் ரீதியாக செம்பியாவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு கூறிவிட்டு சென்றுள்ளார்.

இவ்வாறானதொரு கோழைத்தனமான தாக்குதலுடன் தனது கணவர் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பில் முன்னரே அறிந்திருந்தால் அது தொடர்பாக பொலிசாருக்கு தெரிவித்திருப்பேன் என மனைவி பாத்திமா குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]