கொழும்பு கெசல்வத்த பகுதியில் துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம்

கொழும்பு கெசல்வத்த பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளதோடு குறித்த துப்பாக்கி சூடு கெசல்வத்த, டாம் வீதியில் மோட்டர் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டில் 28 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றதையடுத்து கெசல்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]