கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஐவர் கைது

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே குறித்த ஐவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 650 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை  காவல் துறையினர்  மீட்டுள்ளனர்.

காவல் துறையினக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல் துறையினர் , அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]