கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியின் கோரிக்கை

பொது மக்களுக்கு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு சட்டமா அதிபர் தரப்பின் விளக்கத்தையும் உயர்நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று வரும் 14ஆம் திகதிக்குள் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தாம் பதவியேற்ற 32(1) அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு அமைய, ஆறு ஆண்டுகள்- அதாவது 2021 வரை பதவியில் நீடிக்க முடியுமா அல்லது தற்போது நடைமுறையில் உள்ள 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய 2020 வரை மாத்திரம் பதவியில் இருக்க முடியுமா என்று விளக்கமளிக்குமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், நாளை காலை 11 மணிக்கு உயர்நீதிமன்றம் திறந்த வாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.