கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்வு

கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்வு 2107ஆம் ஆண்டு மே மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இத் தொடர் சொற்பொழிவினை வவுனியா கலை, இலக்கிய நண்பர்கள் வட்டத் தலைவர் “ தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வின் முதல் நாள் 12.05.2017 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இலக்கியச் செம்மல் செ.குணரத்திணம் அரங்கில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெறும். தமிழ் வாழ்த்தினை செல்வி.சௌதாமினி மோகனசுந்தரம் இசைப்பார். தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க இலக்கியக்குழுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன் அவர்கள் நிகழ்த்துவார். “ சிலப்பதிகாரச் சிந்தனைகள் எனும் தலைப்பில் “ தமிழ்மணி” அகளங்கன் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வின் இரண்டாம் நாள் 13.05.2017 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தமிழவேள் க.இ.க.கந்தசாமி அரங்கில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் தலைமையில் நடைபெறும். தமிழ் வாழ்த்தினை திருமதி.ஹம்சானந்தி தர்மபாலன் இசைப்பார். “ கம்பனும் வான்மீகியும்” எனும் தலைப்பில் “ தமிழ்மணி” அகளங்கன் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வின் நிறைவு நாள் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு முத்தையா கதிர்காமநாதன் அரங்கில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத் தலைவர் திரு.த.அரியரத்தினம் தலைமையில் நடைபெறும். தமிழ் வாழ்த்தினை செல்வி.சிந்தூரி, செல்வி.சரவணசுந்தரி இசைப்பார்கள். நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் நிகழ்த்துவார். “ புறநாநூற்றுச் செய்திகள்” எனும் தலைப்பில் “ தமிழ்மணி” அகளங்கன் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]