கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் அழைப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை உடனடியாக கொழும்புக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் நடந்த அரச விழா ஒன்றில் விடுதலைப் புலிகள் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இதுகுறித்த விசாரணைகளுக்காகவே, உடனடியாக கொழும்புக்கு வருமாறு பிரதமர், அழைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும், விஜயகலா மகேஸ்வரன் பிரதமரைச் இன்று சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]