கொழும்புக்கு திரும்பும் பயணிளுக்காகன விசேட பஸ் சேவை நீடிப்பு

கிராம புறங்களில் இருந்து கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மேலதிக பஸ் சேவைகள் நீடிக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு நோக்கி வரும் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதிவரை மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என, சபையின பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்ரசிறி தெரிவித்துள்ளார்.

தூர இடங்களில் உள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு நோக்கி வருவதற்காக இந்த மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, பயணிகளின் நலன் கருதி விசேட ரயில் சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்;ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை வரையிலும், வடக்கு புகையிரத மார்க்கத்திலும் விசேட ரயி;கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தனியார் பஸ் சேவை நாளை முதல் வழமைக்கு திரும்பும் என, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]