கொழும்பில் 16 கடைகள் தீயினால் சேதம்

கொழும்பு , புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (21) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயினால், அப்பகுதியிலிருந்த ஏனைய 16 வர்த்தக நிலையங்களும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த தீயினை கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு, தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து, தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

அப்பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என, பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

புறக்கோட்டை – குமாரவீதி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று அதிகாலை தீப்பரவல் சம்பவம் இடம்பெற்றது.

தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் 16 கடைகள் கொழும்பில் 16 கடைகள் கொழும்பில் 16 கடைகள்

கொழும்பில் 16 கடைகள்