கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திரதன்று அதிகாலை ஐந்து மணி முதல் நண்பகல் 12 மணி வரை காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கான காலி வீதி மற்றும் பழைய பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கான வீதி முழுமையாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலை ஏழு மணி முதல் நண்பகல் 12 மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான பகுதி, புனித மைக்கல் சுற்றுவட்டத்தின் காலி வீதி பகுதி, ரொட்டுன்டா மாவத்தையின் காலி வீதிக்கான பகுதி, செரமிங் சந்தியிலிருந்து பழைய பாராளுமன்றத்திற்கான பகுதி ஆகியன இவ்வாறு மூடப்படும் என்று போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதியோரங்களில் குடியிருப்போருக்கு மட்டும் இந்த வீதிகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யோர்க் வீதியிலிருந்து இலங்கை வங்கி மாவத்தை வரையான பகுதி, சீனோர் சந்தியிலிருந்து செரமிங் சந்தி வரையான பகுதி, பாக்கீர் மாக்கார் மாவத்தை, உத்தரனாந்த மாவத்தை சந்தியிலிருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டம் வரையிலான பகுதிகளுக்கு அந்த வீதிகளில் உள்ள நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலை எட்டு மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை காமினி சுற்று வட்டத்திலிருருந்து டீ.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள பகுதிகளுக்கு அலுவலக பணிகள் நிமித்தம் பயணிக்கும் ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் சுற்று வட்டத்திலிருந்து ரீகல் திரையரங்கு சந்தி வரையான வீதி மூடப்பட்டிருக்கும்.

காலி வீதியின் ஊடாக கொழும்பை வந்தடையும் அல்லது கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் று.யு.சில்வா மாவத்தை ஊடாக ஐயா மாவத்தை வரை உள்ள , திம்பிரிகஸ்யாய வீதி, பேஸ்லைன் வீதி போன்ற வீதிகளை பயன்படுத்த முடியும்.

காலி வீதி ஊடாக கொழும்பை வந்தடையும் அல்லது கொழும்பை விட்டு வெளியேறும் இலகு வாகனங்களுக்காக காலி வீதியின் ஊடான பகந்தலே வீதி, ஆர்.ஏ.டீ.மெல் மாவத்தை, தும்முல்ல சந்தி;, கிளாஸ் ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டர்ஸ், ஹோட்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி மற்றும் ரெக்னிக்கல் சந்தி ஊடாக பயணிக்கலாம். காலை ஒன்பது மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பித்தலை சந்தி மற்றும் கொம்பனித்தெரு ஊடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.