கொழும்பில் பெண்ணுக்கு பாலியல் சைகைகளை காட்டிய நபருக்கு நேர்ந்த கதி

கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியில் கையில் சைகைகளை காட்டியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பாலியல் ரீதியில் மற்றும் ஒருவருக்கு சொல்லாலோ அல்லது நடவடிக்கையாலோ தொந்தரவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்ற அடிப்படையிலேயே இந்த முச்சக்கர வண்டி சாரதி கைதுசெய்யப்பட்டார்.

குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி தம்மை தொந்தரவுக்கு உட்படுத்திய காணொளி காட்சியை குறித்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து கலகா பகுதியை சேர்ந்த இந்த சந்தேகநபர் பம்பலப்பிட்டிய காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்த நிலையிலேயே புதுக்கடை நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]