கொழும்பில் நாளை பாரிய போராட்டம்

கொழும்பில் நாளை பாரிய போராட்டம்

தலைநகர் கொழும்பில் நாளை (புதன்கிழமை) பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே அரச அபிவிருத்தி அதிகாரிகள் இப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

குறித்த போராட்டமானது, கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்துக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் அண்மையில் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுடன் அபிவிருத்தி அதிகாரிகளாக இணைத்துக் கொள்ளப்பட்ட 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஏனைய அபிவிருத்தி அதிகாரிகளை போன்று மாதாந்த சம்பளத் திட்டத்துக்குள் உள்வாங்க வேண்டும் என்பதை முக்கிய பிரச்சினையாக வலியுறுத்தி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் குறித்த போராட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அபிவிருத்தி அதிகாரிகளின் கூட்டு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]