கொழும்பில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம்- பொய் என்று மறுத்த மஹரகம பொலிஸ்

மஹரகம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடம் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் சிலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக வெளியாகும் செய்திகளை அப்பகுதி பொலிஸார் பொய்யான செய்தி என தெரிவிக்கின்றனர்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட டெ்ம்பல் வீதி மற்றும் கென்டாஹென பகுதிகளிலேயே நள்ளிரவில் சிலர் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டி.எப்.மீதின், “இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. இது பொய்யான செய்தி” எனவும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]