கொழும்பில் டெங்கு நோய் தொற்று அதிகரிப்பு

கொழும்பின் பல்வேறு இடங்களில் டெங்கு நோய், வைரஸ் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவல் அதிகரித்துள்ளதால் மக்களை அவதாதனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

பாரிய வறட்சிக்கு பின்னர் கடுமையான மழை பொழிந்ததால் குப்பை கூலங்களில் கழிவு அகற்றப்படாமை, கால்வாய்களில் அசுத்தமான நீர் பெருக்கம் மற்றும் சூழல் சுத்தமின்மையால் இவ்வாறு நோய்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக மத்திய கொழும்பின் பல்வேறு இடங்களில் நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் டெங்கு நோயாளர்களே நிரம்பிக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் டெங்கு நோயின் பாதிப்பால் 150 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]