கொழும்பில் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

நாளை காலை முதல் கொழும்பில் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 வரையில் களனி பிரதேச சபை, பேலியகொட நகர சபை, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பியகம் பிரதேச சபையின் கோனவெல வீதி, மகுருவில வீதி, விஜயராம வீதி மற்றும் பெரலேகல பகுதிகளுக்கும் நீர் வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]