கொழும்பில் குப்பையால் பணம் புரட்டிய மாபியா நிறைவு

கொழும்பில் குப்பையால் பணம் புரட்டிய மாபியா நிறைவு

துறைமுக நகரத்தை அனைத்து சுற்றாடல் ஆய்வுகளின் அடிப்படையில் நிர்மாணிப்பதாகவும், நாட்டின் குப்பை பிரச்சினைக்கு துரித தீர்வை வழங்கவுள்ளதாகவும் மாநகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரசபையில் இடம்பெற்ற கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர அலங்கரிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பு நகரில் குப்பைப் கூழங்கள் தொடர்பாக மாத்திரமன்றி டெங்கு தொற்று, நீர் குழாய்களை துாய்மையாக பராமரித்தல், வளி மாசடைதலை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட விடயங்களில் தற்போது தெற்காசியாவில் முக்கிய இடத்திற்கு வந்துள்ளோம்.

வதந்தியான செய்திகளுக்கு முதலிடத்தை வழங்குவதை போன்று இவ்வாறான நற்செய்திகளுக்கும் முதலிடத்தை வழங்கி கவனம் செலுத்துமாறு கோருகிறேன்.

வளி மாசடைத்தல், நீர் மாசு காரணமாக புதுடில்லி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்கள் தற்போது ஸ்தம்பித்துள்ளன.

ஆனால் கொழும்பு நகரத்தை அந்த பாதிப்பில் இருந்து காப்பாற்றியுள்ளோம்.

2007 – 2008 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நாம் வளி மாசடைதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]