கொழும்பில் இருவருக்கு மட்டுமே தெரிந்திருந்த இரகசியத்தை போட்டுடைத்த எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளுடனான அமைதி முயற்சிகளை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார் என்று நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

WION என்ற ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியில் அவர்,

“அமைதி முயற்சிகளில் ஈடுபடுமாறு எமக்கு விடுத்த அழைப்பை அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மிகவும் இரகசியமாகவே வைத்திருந்தார்.

அதுபற்றி அப்போது கொழும்பில் இரண்டு பேருக்கு மாத்திரமே தெரிந்திருந்தது. ஒருவர் சந்திரிகா குமாரதுங்க. மற்றவர், இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்த இரகசியம் பேணப்பட்டது. அதற்குப் பின்னரே பகிரங்கப்படுத்தப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான எனது முதலாவது சந்திப்புத் தொடர்பாக, அப்போதைய இலங்கை பிரதமர் கூட அறிந்திருக்கவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]