கொழும்பில் இடம்பெற்ற கோரவிபத்தில் காதலன் பலி- காதலியின் பரிதாபநிலை வீடியோ உள்ளே

கொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியமையினால் பாரிய விபத்து ஏற்பட்டிருந்தது.

இந்த அனர்த்தம் காரணமாக 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்ததுடன், அவரது காதலி மற்றும் சகோதரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் காதலன் உயிரிழந்த விடயம் அறியாமல் காதலி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம வைத்தியசாலையில் சிக்சை பெறும் காதலி தனது காதலனுக்காக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடித்தையும் உயிரிழந்த இளைஞனின் கையில் வைத்து இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், நீங்கள் தான் இந்த உலகிலேயே சிறந்தவர். இப்படி ஒன்று நடக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. சண்டையிட்டு கொண்டாலும் ஒரு நாளும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருந்ததில்லை. காயமடைந்தமையினால் 3 நாட்களாக உங்களை பார்க்காமல் உள்ளேன். நீங்கள் எப்போது சந்தோஷமாக இருக்க வேண்டும். எனது மூச்சுக்காற்றை கொடுத்தாவது உங்களை காப்பாற்றுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்கின்றேன். நன்றாக சாப்பிடுகள். நன்றாக மூச்சுவிடுங்கள். உங்களுக்கு என்ன நடந்தாலும், நான் விட்டு செல்ல மாடேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது காதலன் உயிரிழந்தமை தெரியாமல் காதலி எழுதிய உருக்கமான வரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை பெரிதும் கவலை அடையச் செய்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]