கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தேரர் அனுமதி

கோபாவக தம்மிந்த தேரரை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

தேரரை, விமான படையினரின் வானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் பிரதம குருவான கோபாவக தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இனந் தெரியாத நபர்களால், நேற்று இரவு 11 மணியளவில் குறித்த துப்பாக்கிச் சூடு, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]