கொழும்பிலிருந்து புறப்பட்டன ஈரானிய போர்க்கப்பல்கள்

கொழும்புத் துறைமுகத்தில் நான்கு நாட்களாக தரித்து நின்ற ஈரானிய கடற்படையின் நாசகாரிப் போர்க்கப்பல்கள் நேற்று புறப்பட்டுச் சென்றன.

ஈரானிய கடற்படையின் 50 ஆவது கப்பல்அணியைச் சேர்ந்த ரொன்ப் என்ற விநியோக மற்றும் போர்க்கப்பல், நாசகாரி கப்பல்களான நக்டி மற்றும் பயன்டோர் ஆகியன, நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கடந்தவாரம் கொழும்பு வந்தன.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அனைத்துலக கடலில் தமது பயணத்தின் ஒரு அங்கமாகவே இந்தப் போர்க்கப்பல்கள் அணி கொழும்பு வந்தமை குறிப்பிடத்தக்கது.