கொழும்பின் பல்வேறு பகுதிகளில் தீடீர் சுற்றிவளைப்பு: போதைப்பொருளுடன் நால்வர் கைது

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் தீடீர் சுற்றிவளைப்பு: போதைப்பொருளுடன் நால்வர் கைது

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் 28 வயதிற்கும் 38 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுவதோடு, அவர்களில் இருவர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சுற்றிவளைப்பானது, மட்டக்குளி, ஏகொடஉயன மற்றும் மாளிகாகந்தை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2கிராம் தொடக்கம் 5கிராம் வரையில் போதைப்பொருள்கள் கைபற்றப்பட்டுள்ளதோடு, தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]