‘கொள்ளை’யிட்ட மூவர் கைது

பெலிஅத்த, வலஸ்முல்ல பகுதியில் எரிபொருள நிரப்பு நிலையம் 650,000 ரூபா பணத்தை ‘கொள்ளை’யிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை குற்ற விசாரணைப் பிரிவினரால் பெலிஅத்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களிடம் இருந்து கொள்ளையிட்ட பணத்தில் 25ஆயிரத்து 150 ரூபாய் பணம் மற்றும் 35, ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், 18 மற்றும் 19 வயதுடைய பெலிஅத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]