கொள்ளையிட முயன்றவர் கைது

மாத்தறை நகரில் உள்ள வர்த்தக நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முயற்சித்த பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாமர இந்திரஜித் என்ற குறித்த நபர், ஹங்கொட்டுவ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாத்தறை நகரில் உள்ள வர்த்தக நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு வந்த நபர்கள் மற்றும் பொலிஸாருக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 3 பொலிஸார் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர அழைப்புக்கு கிடைக்கப்பபெற்ற தகவலுக்கமைய, குறித்த பிரதேசத்திற்கு பொலிஸார் செனற நிலையில், இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, மற்றுமொருவர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இரண்டு மற்றும் இயந்திர துப்பாக்கி என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]