கொள்ளையிட்ட பணத்தில் ஒரு தொகையை வீசிச் சென்ற நபர்கள்

ஆலயத்தின் தலைவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையிட்ட இனந்தெரியாதவர்கள் அதில் ஒரு தொகை பணத்தை ஆலய தலைவரின் வீட்டுக்கு முன்பாக வீசிச் சென்றுள்ளனர்.

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழாவுக்காக ஆலயத்தின் தலைவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம், இனந்தெரியதாவர்களால் கொள்ளையிடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் பொகந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளையிட்ட பணத்தில் ஒரு இலட்சம் ருபாய் பணம், ஆலய தலைவரின் வீட்டின் முன்பாக இனந்தெரியாதவர்களால் கொண்டு வந்து போடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]