கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நான்கு சிறார்கள் கைது- மட்டக்களப்பில் சம்பவம்!!

மட்டக்களப்பு- சந்திவெளி பிரதான வீதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளியின் உதவியுடன் சிறுவர்கள் நான்கு பேர் 11.03.2018 ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொள்ளையிடப்பட்ட கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சிறுவர்கள் சந்திவெளி பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்த 10 , 12 மற்றும் 13 வயதுடையவர்களென தெரியவந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் கூறினர்.

இச்சிறுவர்களது தந்தையர் கடந்தகால போர்ச்சூழலின்போது மரணித்துவிட்டதாக தெரியவருகிறது.

இச்சிறுவர்கள் பராமரிப்பு இல்லத்திலிருந்து எவருக்கும் தெரியாமல் இரவு வேளைகளில் வெளியேறி சுமார் ஐந்நூறு மீற்றர் தொலைவிலுள்ள கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தின் கூரைவழியாக உள்ளேநுழைந்து தொலைபேசி கருவிகளை திருடியுள்ளனர். இச்சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் மறுதினம் அக்கடைக்குள் கூரைவழியாக இறங்கி கெமராக்களுக்கு சேதம் ஏற்படுத்திச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]