கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது

யாழில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வாளுடன் கைதானதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டுக்கோட்டை, சங்கானை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்படைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கள்ளி வீதியில் நள்ளிரவு நேரம் வாள்களுடன் நடமாடிய கும்பலைத் துரத்திச் சென்ற மாவடி இளைஞர்கள், ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளதுடன், அதன்போது, அவருடன் வந்ததாகக் கூறப்படும் மேலும் 5 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

வாளுடன் பிடிபட்ட மானிப்பாயை சேர்ந்த இளைஞர் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]