கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மனைவியுடன் வருகை புரிந்து சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

கொல்லூர் மூகாம்பிகை
கொல்லூர் மூகாம்பிகை

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், குந்தாபுரா வட்டத்தில் கொல்லூரில் மூகாம்பிகை கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை தனது மனைவி மைத்ரியுடன் வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அங்கு நடைபெற்ற சதாசண்டி ஹோமம் உள்பட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். அவரது வருகையையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 வரை கோயிலுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]