முகப்பு News Local News கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு பதவியுயர்வு

கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு பதவியுயர்வு


கொல்லப்பட்ட பொலிஸ்

விகாரையின் தேரரொருவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட் பொலிஸ் சார்ஜன்ட் தர உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகத்தரை உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின்போரில் குறித்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – கல்லெந்த விகாரைக்கு விசாரணைக்காக சென்ற நிலையில், நேற்;றைய தினம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், கொலை செய்யப்பட்டிருந்தார்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com