கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு

கொல்கத்தாவில் மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலுள்ள மேஜர்ஹட் மேம்பாலமே இவ்வாறு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், மேம்பாலத்துக்கு கீழே சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

மேலும் இவ் விபத்தில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதோடு, அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தாவில் மேம்பாலம் கொல்கத்தாவில் மேம்பாலம் கொல்கத்தாவில் மேம்பாலம் கொல்கத்தாவில் மேம்பாலம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]