‘கொலன்னாவை’யில் புதிய எண்ணெய் தாங்கிகள் அமைக்க திட்டம்

‘கொலன்னாவை’யில் புதிய எண்ணெய் தாங்கிகள் அமைக்க திட்டம்

கொழும்பு கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை அமைந்துள்ள பகுதியில் மேலும் 10 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கும் பணிகள் பெற்றோலிய வளத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சரவை அனுமதியுடனே தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் 11,200மெட்ரிக் தொன் கொள்ளளவுள்ள 3 எண்ணெய் தாங்கிகளும், 11,900 மெட்ரிக் தொன் கொள்ளளவு விமான எரிபொருள் தாங்கியொன்றும், 11,600 மெட்ரிக் தொன் டீசல் தாங்கியொன்றும், 5,800மெட்ரிக் தொன் டீசல் தாங்கிகள் மூன்றும், மண்ணெண்னை தாங்கியொன்றும், 3,800 மெட்ரிக்தொன் டீசல் தாங்கியொன்றும் உருவக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில், ‘ தற்போது ஒருமாதகாலம் மாத்திரமே எண்ணையை களஞ்சியசாலைகளில் வைத்திருக்கமுடியும் இத்திட்டத்தின் மூலம் 60 நாட்கள் எண்ணெயை இருப்பில் வைத்துக்கொள்ள முடியும்.

தற்போது நாட்டின் எரிபொருள் தேவை 90 சதவீதம் அதிகரித்துள்ளமையாலேயே இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். தற்போதைய எண்ணைத்தாங்கிகள் 40 வருடங்கள் பழமையானவையாகும். இதனால் 40 வடங்களுக்குப்பின் மீண்டும் புதிய எண்ணைத்தாங்கிகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருமலை எண்ணைத்தாங்கிகளையும் இந்தியாவுடன் சேர்ந்து சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும்” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]