கொத்மலை ஆற்றில் மூழ்கி மாணவன் பலி

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன், கொத்மலை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு ஹமீத் ஹல் உசைனியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதுடைய உயர்தர மாணவனே இவ்வாறு இன்று பிற்பகல் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், உயர்தரத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.

இன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த போது, கொத்தலை ஆற்றில் நீராடுகையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

திடீரென சுழியில் சிக்குண்டுள்ள குறித்த மாணவனை சக மாணவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை. பொலிஸாரின் உதவியுடன் பிரதேசவாசிகளால் குறித்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவனின் சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெக்கப்பட்டு வருவதாக கொத்மலை பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]