கொத்து ரொட்டி வாங்கிய நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி- அம்பலந்தோட்டையில் சம்பவம்

அம்பலந்தோட்டையிலுள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று கொத்து ரொட்டி வாங்கிய போது தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கோழி கொத்து ரொட்டியில் தவளை இருந்துள்ளதாகக் கூறி அம்பலந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி யூ.பி.மாலக சில்வாவிடம் பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த கொத்து ரொட்டியுடன் அம்பலந்தோட்டையில் உள்ள உணவு கடைக்கு சென்ற சுகாதார வைத்திய அதிகாரிகள், கடை உரிமையாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் உணவு கடையின் உரிமையாளர் அம்பலந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோழி கொத்து ரொட்டியுடன் தவளையின் உடல் சிதைந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]