கொட்டும் மழைக்கு மத்தியில் ஆர்ப்பாட்டக் களத்தில் ஒரே மேடையில் மைத்திரி மற்றும் மஹிந்த

அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்ட பேரணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து வெவ்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பத்தரமுல்லை நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதி நோக்கி இந்த ஆர்ப்பாட்ட பேரணி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாடாளுமன்ற சுற்றுவட்டப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழைக்கு கொட்டும் மழைக்கு

இந்தநிலையில் ஆர்ப்பாட்டங்களினைத் தொடர்ந்து மத அனுஸ்டானங்களுடன் மாநாட்டு கூட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டும் மழைக்கு

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிந்த அபேகுணவர்த்தன, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர்களான காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், அமைச்சர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தில் மழைக்கு மத்தியிலும் அதிகளவான மஹிந்த ஆதரவாளர்கள் கூடியுள்ளதாக தெரியவருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]