கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டில் ´குடு செல்வி´ இன் கணவன் படுகாயம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்பட்டா வீதியில் நேற்று (24) துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

137 ஆம் இலக்க ஒழுங்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், காயமடைந்தவர் ´குடு செல்வி´ எனும் போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணின் கணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 2015 ஆம் கொல்லப்பட்டுள்ள நிலையில், நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.