கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; இருவர் படுகாயம்

கொட்டாஞ்சேனை, ஹெட்டியாவத்தை முச்சந்தியில் வைத்து இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயரிழந்துள்ளார்.

மிலான் மதுசங்க (29) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு மெனிங் சந்தை வியாபாரிகள் மூவர் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சமந்த பிரதீப், மிலான் மதுசங்க மற்றும் ஜீ.பி.குமாரதாஸ ஆகியோரே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

படுகாயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்னதாக, சமந்த பிரதீப் என்ற நபருடைய வீட்டுக்கு முன்னால், மலர் வளையம் ஒன்று இனந்தெரியாதவர்களால் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.