கொட்டகலை பாலத்தின் திருத்து பணிகள் நிறைவு ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

கொட்டகலை 60 அடி பாலத்தின் திருத்த பணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில் பரீட்சார்த்த ரயில் இன்று காலை 11 மணியளவில் பாலத்தினூடாக செலுத்தப்பட்டு உறுதிசெய்ததன் பின் இப்பாலத்தின் ஊடாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலும் பயணித்தது. இதனைத்தொடர்ந்து இவ்வீதியினூடான ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பின.

கொழும்புபதுளை பிரதான ரயில் போக்குவரத்து பாதையில் கொட்டகலைரயில் நிலையத்திற்கு அருகாமையில் 110ஆவது மைல் கட்டைப்பகுதியில் கடந்த 13ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் ரயில் பெட்டிகள் நான்கு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் புகையிரத பெட்டிகளுக்கும் தண்டவாளங்களுக்கும் 60 அடி பாலத்திற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஈடுபட்டு அதனை சீர் செய்து தற்போது புகையிரத போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]