‘கொட்டகலை’யில் பெண் வேட்பாளர் வீட்டின் மீது கல்வீச்சு

கொட்டகலை

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை பிரதேச சபையில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவரும், மற்றுமொரு கட்சியில் போட்டியிடும் ஆண் வேட்பாளர் ஒருவருமே இத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் வேட்பாளரின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகில் மற்றைய கட்சியின் ஆதரவாளர்கள் வாக்குகள் கேட்டு சென்றபோது, தனது வீட்டிற்கு கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

தான் தனிமையில் இருந்த போது, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பெண் வேட்பாளர், பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும், மற்றைய கட்சியின் ஆதரவாளர்கள் அதனை மறுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]