கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு

தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

வடமாகாண ஆளுநருடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தமக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

இல்லாவிட்டால், எதிர்வரும் 25ஆம் திகதியின் பின்னர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என, அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளார் கலாநிதி தங்கராஜா காண்டீபன் இதனை தெரிவித்துள்ளார்.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமை காரணமாக, அரச மருத்துவ அதிகாரிகளால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்று வட மாகாணத்தில், கடந்த திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில், வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]