கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும் : சிவில் அமைப்புகள் போராட்டம்

நல்லாட்சி அரசு அமையபெற்று இரண்டுவருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுக்கப்பட்ட வாக்குதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதனை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் வலியுறுத்தி இன்று கொழும்பு விகாரமாதேவி பூங்வுக்கு முன்னாள் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்திற்காக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்து பாரிய பிரசாரத்தை மேற்கொண்ட சிவில் அமைப்புகளே இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.

இதில் விக்கிரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட சிவில் அமைப்பின் பிரநிதிகளுடன் அரசதரப்பில் அமைச்சர்களான மனோ கணேசனம், மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]