கொக்கலையில் 7 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு

 

7 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் புதிய தொழிற்சாலையொன்று கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கரங்களால் தொழிற்சாலை திறந்துவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 3.30 மணியளவில் அது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

‘ஏ.டீ.ஜீ ஹென்ட் கெயார்’ தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குறித்த தொழிற்சாலையில் கையுறைகள் ( glove manufacturing plant) தயாரிக்கப்படவுள்ளன. 12 ஏக்கர் பரப்பில் குறித்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 1994ம் ஆண்டு ஜுன் 14ம் திகதி அபிவிருத்தியமைச்சராக இருந்த போது அதன் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர்களான கயன்த கருணாதிலக, ச்சந்திம வீரகொடி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.