கொகா-கோலாவின் அபிமானமிகு கிறிஸ்மஸ் கேரவன் பண்டிகைக்காலத்திற்கு புத்துணர்வூட்ட மீண்டும் வந்துள்ளது

இந்த விடுமுறைக்காலத்தில் கொகா-கோலாவுடன் “சில நினைவுகளை ஆரம்பியுங்கள்”

அனைவரின் அபிமானம் பெற்ற கொகா-கோலாவின் கிறிஸ்மஸ் கேரவன் (Christmas Caravan) இலங்கையின் 20 மையங்களில் விடுமுறைக்கொண்டாடத்திற்கு மேலும் களிப்பூட்டும் வகையில் புத்துணர்வூட்ட வருகின்றது. தொடர்ச்சியாக நான்காவது வருடமாக கொகா-கோலாவினால் முன்னெடுக்கப்படும் இந்த கேரவன் ஆனது, நத்தார் பருவகாலத்தின் மகிழ்ச்சியை அனைவருக்குள்ளும் பரப்பியவாறு, நாடளாவிய ரீதியிலுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மத்தியில் சந்தோஷ தருணங்களை விதைக்கின்றது.

இந்த வருடம் இக்கேரவன் ஆனது பியகமயில் உள்ள கொகா-கோலா தொழிற்சாலையிலிருந்து டிசம்பர் 19ம் திகதி தனது பயணத்தினை ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து மாலபே, நீர்கொழும்பு கடற்கரை, ஹோமாகம, ராஜகிரிய, பத்தரமுல்ல, மேஜஸ்டிக் சிற்றி, கிருலப்பன, வத்தளை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்கின்றது. பளிச்சிடும் செந்நிற கொகா-கோலா ட்றக் ஆனது, கரோல் இசைக்கலைஞர்கள், வாத்தியக்கலைஞர்கள் ஆகியோருடன், பண்டிகைக்கால பாடல்கள் மற்றும் கரோல் கீதங்களுடன் இலங்கைத் தெருக்களில் வலம்வரும் அதேவேளை, அதிலுள்ள நத்தார் தாத்தா, ட்றக்வண்டிக்கு அருகிலிருப்பவர்களுக்கு தமது மயக்கும் மாயாஜால வெண்பனி விளிம்புகொண்ட சிவப்புநிற மூட்டையிலிருந்து வியக்கவைக்கும் வெகுமதிகளை அளிக்க காத்திருக்கின்றார். ‘சில நினைவுகளை ஆரம்பியுங்கள்’ (“Start Some Memories”)
என்ற கொகா-கோலாவின் விடுமுறை ஊக்குவிப்பு கருத்தாக்கத்துக்கு ஏற்றவிதத்தில், இந்தக் கேரவன் ஆனது, குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, எப்போதும் மனதிற்குள் வைத்து மீட்டிப்பார்க்கும் வகையில் தனித்துவமிகு, மறக்க முடியாத ஞாபகங்களை உருவாக்கி அளிக்கும்.

இந்த கேரவன் குறித்து கருத்துரைத்த கொகா-கோலா ஸ்ரீலங்கா பிரைவேற் லிமிடட் முகாமைத்துவ பணிப்பாளர் சோனு க்ரோவர் அவர்கள் “இந்த வருடம் கொகா-கோலா நத்தார் பணடிகைக் காலத்தின் மகிழ்ச்சியினை அனைவரும் அனுபவிக்கும் வகையில் இந்த நட்சத்திர கேரவன் வண்டியானது, சமூகத்தின் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, நத்தார் காலத்தின் வசீகரிக்கும் மாயாஜாலத்தினை அனைவர் மத்தியிலும் தூண்ட விளைகின்றது. எமது துடிப்புமிகு கரோல் பாடகர்கள் இந்த கொண்டாட்ட காலத்தில் இளவயதினர் முதல் முதியோர் வரை அனைவர் மத்தியிலும் நத்தார் காலத்தின் பாங்காகவும், கொகா-கோலா வர்த்தகநாமத்தின் முக்கிய அம்சமாகவும் விளங்கும் மகிழ்ச்சி மற்றும் களிப்பின் சாரலை பரப்புவார்கள் என நம்புகின்றேன். ஒளிரூட்டப்பட்ட கொகா-கோலா கிறிஸ்மஸ் ட்றக் ஆனது, விடுமுறைக்கால கொண்டாட்டத்தினை உலகளாவிய ரீதியில் பிரதிபலிக்கும் விளம்பரச் சின்னமாக விளங்குவதுடன், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னிருந்தே தொலைக்காட்சி விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நத்தார் சின்னமாக உருமாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதுமுள்ள சமூகங்கள் மத்தியில் மகிழ்ச்சியினை கொண்டு வருகின்றமை எமக்கு சந்தோஷதத்தினை அளிக்கின்றது. எமது நத்தார் ட்றக் இனை நேரடியாக பார்வையிட்டு, விடுமுறைக் களிப்பிளை தமது நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்த நத்தார் கேரவன் ஊக்குவிப்பு வழிவகுக்கும் என்றால் அது மிகையில்லை” என்றார்