கைவிலங்குடன் 4 மணிநேரம் பஸ்ஸிற்குள் காத்திருந்த ரவீந்திர விஜேகுணவர்தன

பாதுகாப்பு படைகளின் பிரதானியும், முன்னாள் கடற்படை தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன இன்று கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் 4 மணிநேரம் சிறைச்சாலை பஸ்ஸில் காத்திருக்க வேண்டியிருந்தது.

காலை 10.30 மணியளவில் சிறைச்சாலை பஸ் மூலம் கோட்டை நீதிவான் வளாகத்துக்கு அழைத்து வரப்பட்ட ரவீந்திரவின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை பஸ்ஸிலேயே காத்திருக்க வேண்டியிருந்தது.

பிற்பகல் 2.10 மணியளவில் அட்மிரல் ரவீந்திரவை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றுக்குள் அழைத்துச் சென்றனர். தற்போது ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான நேவி சம்பத்திற்கு கடற்படை தலைமையகத்தில் அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டிலேயே அட்மிரல் ரவீந்திர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]