முகப்பு Cinema கையுடைந்த நிலமையில் மக்களுக்கு உதவும் அமலாபால்

கையுடைந்த நிலமையில் மக்களுக்கு உதவும் அமலாபால்

கையுடைந்த நிலமையில் மக்களுக்கு உதவும் அமலாபாலின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக வலம் வருகின்றது.

மலையாள நடிகையான அமலாபால் பல மொழிகள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘மைனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து அமலாபாலிற்கு சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் வைத்து கையில் அடிப்பட்டது. அதற்காக தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வந்த அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்கச் சொல்லியுள்ளனர்.

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களுக்கு, தன் கை உடைந்த நிலையிலும் அவர்களுக்கு நடிகை அமலாபால் உதவி வருகிறார்.

கேரளாவில் மழை வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்து மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக தேவையான பொருட்களை வாங்கி அனுப்பியுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com