இருபதுக்கு இருபது தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரை 2-0 என கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கைஅணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றிருந்த நிலையில், இன்று 2 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று இடம்பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கைஅணி அதிரடியாக விளையாடியது. 20 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 210 ஓட்டங்களைப்பெற்றது.

இலங்கை அணிசார்பாக அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் 70 ஓட்டங்களையும், தனுஷ்க குணதிலக 42 ஓட்டங்களையும், அதிரடியாக ஆடிய சானக்க 11 பந்துகளில் 30 ஓட்டங்களை விளாசினார்.

பந்து வீச்சில் ஜயிட், ரஹ்மான், சர்க்கார் மற்றும் சைபுதீன் ஆகிகோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

211 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி இலங்கை அணியின் பந்து வீச்சுக்குத் ரன் குவிக்க முடியாமல் ஆரம்பம் முதலே திணறியது.

பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மட்டுமே பெற்று 75 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பாக மஹமதுல்லா 41 ஓட்டங்களைப் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் குணதிலக மற்றும் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் ஆட்டநாயகனாகவும் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் தெரிவு செய்யப்பட்டார்.