3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 31.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

மேற்கிந்திய தீவுகளின் தலைவர் ஜேசன் ஹோல்டர் 25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 14.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கட்டை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா 63 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இத்தொடரின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]